கடந்த 24 மணிநேரங்களில் அதிகரித்த கைதுகள்


1490 பேர் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரங்களில் குறித்த கைதுகள் இடம் பெற்றுள்ளது.

இதே வேளை குறித்த காலப்பகுதிக்குள் 498 வாகனங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் ஏழுபதாயிரத்து நாற்பத்தியிரண்டு பேர் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

19856 வாகனங்களும் குறித்த காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments: