இலங்கை வந்தடைந்துள்ள 223 பேர்


பிலிப்பைன்ஸ் நாட்டில் நிர்கதியாகியிருந் இலங்கையினை சேர்ந்த  223 பேர் நேற்று இரவு கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்தனர்.

ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்விநடவடிக்கைகளுக்காக சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்திற்னு அருகில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை அனுப்பிவைக்கப்படுவர்.


No comments: