மட்டக்களப்பில் திடீர் சுகயீனமுற்ற 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி


தீடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இவர்களில் நேற்று  இரவு 4 பேரும் இன்று 14 பேரும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அனுமதிக்கப்பட்டவர்களில் 8 சிறார்கள் உள்ளடங்குகின்றதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வயிற்றோட்டம், காய்ச்சல், வாந்தி  போன்ற அறிகுறிகளுடன் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும்  வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி பிரசுரித்துள்ளது.

No comments: