1.55 வரை உணவு, நீர் என்பவற்றை முற்றாக தவிருங்கள் வீட்டை விட்டு வெளியே போக வேண்டம்


இந்த கிரகண காலத்தில் குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் குறிப்பிட்ட இந்த கிரகண நேரத்தில், தண்ணீர் கூட குடிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்தக் கிரகணகாலத்தில் உணவுகள் சமைப்பதையோ,
உட்கொள்ளுவதையோ தவிர்துக்கொள்ளவும். இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் நஞ்சாகும் தன்மை உடையன என மூதாதையர்களும், விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர். அவ்வாறு உணவுகள் இருந்தால் தர்ப்பை புல்லினால் அவற்றை மூடி வையுகள். முடிந்தவரை எல்லோருமே கிரகண நேரத்திற்கு முன்பாகவே உணவு சாப்பிட்டுவிட்டால் நல்லது.

கிரகணம் முடிந்த உடன் உங்கள் வீடுகளை சுத்தமாக துடைத்து விட்டு, அதன் பின்பாக தலைக்கு குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது நல்ல பலன் தரும்.

குறிப்பிட்ட இந்த கிரகண நேரத்தில், அனுமனையும்,  சக்திவாய்ந்த அம்மனையும், சிவபெருமானையும் வழிபடலாம். கிரகண நேரத்தில் மனதார

‘ஓம் நமஸ்சிவாய’

‘ஸ்ரீ ராம ஜெயம்’

‘ஓம் சக்தி’


இப்படிப்பட்ட மந்திரங்களை உச்சரிப்பதால் எந்த கிரக தோஷமும் நம்மை தாக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பிதிர்தோஷம்நீங்கிட..

அமாவாசைக்கு அடுத்து தினமான, ஞாயிற்றுக்கிழமை அன்று,

(21.06.2020 மதியம் வரை அமாவாசை) 

சூரிய கிரகண சமயத்தின் போது, சாஸ்திரப்படி கிரக தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது நம்மில் பல பேருக்கு அறியப்படாத ஒரு சாஸ்திரமாக இருந்தாலும், இந்த கிரக காலத்தில் தர்பணம் கொடுப்பதன் மூலம், நம் பித்ருக்களின் தோஷம் நீங்கும் என்றும், அவர்களுடைய ஆசீர்வாதத்தை விரைவாக, முழுமையாக பெற முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உங்களால் முடிந்தால் வயது முதிர்ந்த யாரேனும் ஒருவருக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுக்கலாம். அல்லது இன்னும் வசதி படைத்தவர்கள் ஆசிரமங்களில், அன்னதானம் செய்வது மிகப் பெரிய பலனை தேடித்தரும்.

இதன் மூலம் பித்ரு தோஷம், பித்ரு சாபம்,

கிரக தோஷம் போன்ற பல தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க வீட்டில், நீண்ட நாட்களாக சுபகாரியத் தடை இருந்தாலும், இந்த கிரகண காலத்திலும், அமாவாசை தினத்திலும், செய்யக்கூடிய அன்னதானமும், தர்ப்பணமும் அந்த தடைகளை தகர்த்து எறிந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

முடிந்தால் நாக பிரதிஷ்டை செய்து (பஞ்சலோகம், அல்லது ஏதாவது கல் சிலையில் இருந்தால் கூட பரவாயில்லை) அதற்கு அபிஷேகம் பூஜை செய்ய வேண்டும் என்று குறிக்கப்படுகிறது.

இதனால் ராகு , கேது தோஷம் நிவர்த்தியாகும்.

சிவபூஜை, சமய தீக்க்ஷை பெற்றவர்கள் அதிகாலையில் தாங்கள் அனுட்டான நியமனங்களை செய்திருப்பினும் கூட மறுபடியும் சூரிய கிரகணத்தின் பொழுது செய்ய வேண்டும் என்று நியமம் உள்ளது

வெற்றுக்கண்ணினால் சூரியனை இக்காலப்பகுதிகளில் பார்ப்பதனைத் தவிர்கவும்.

இதோடு மட்டுமல்லாமல் நம் குடும்பம் எந்த ஒரு கெட்ட சக்தியின் பிடியிலும் சிக்கிக்கொள்ளாமல் நம்முடைய, முன்னோர்கள் பாதுகாப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் வீட்டு முன்னோர்களை நினைத்து இந்த அமாவாசை திதி யோடு சேர்த்து,

கிரகண தர்ப்பணம், கிரக தர்ப்பணம் தையும் தவறாமல் கொடுக்க வேண்டும்.


No comments: