12 மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது


யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பன்னிரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் தேர்தல் ஒத்திகை தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் நோக்கில் இந்த ஒத்திகை நடத்தப்படவுள்ளமை  சுட்டிக்காட்டத்தக்கது

No comments: