மாவெளி வனப்பகுதியில் 127 கிலோ கொக்கும்பொத் வாசனை திரவிய பட்டைகளோடு ஒருவர் கைது .


(சதீஸ்)

அனுமதிபத்திரம்மின்றி நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு
சட்டத்தை மீறி பொகவந்தலால் இரானிகாடு மாவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமாக கொக்கும்பொத் என கூறப்படும் வாசனை திறவி பட்டைகளை பறித்த சந்தேக நபர் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவமானது இன்று வெள்ளிகிழமை 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொகவந்தலாவ இரானிகாடு கிழ்பிரிவு தோட்டபகுதிக்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்த பகுதியினை சோதனையிட்டபோது 127 கிலோ கொக்கும்பொத் வாசனை திறவிய
பட்டைகளையும் மீட்டுள்ளதோடு குறித்த வாசனை திரவியபட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேலளை இந்த வாசனை திரவியங்கள் பட்டை கடத்தும் நடவடிக்கையில் மேலும் சில சந்தேக நபர்கள் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
No comments: