குளவிதாக்குதலுக்கு உள்ளாகிய 08 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.


(நீலமேகம் பிரசாந்த்)

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பொலிஸ் பிரிவில் டயகம வெஸ்ட் 5ம் பிரிவில், குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய 8 பேர் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் வேலை ,செய்துக்கொண்டிருந்த சமயம் திடிரென குளவிகூடொன்று மரத்திலிருந்து விழுந்தமையால் அருகில் வேலைப்பார்த்த 8 பேர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் குறித்த வைத்தியசாலைக்கு, அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் நேரடியாக களத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்து கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலில் 7 ,பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்கியுள்ளதோடு அதில் ஒரு பெண் தோட்டத்தொழிலாளிக்கு, தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments: