கொழும்பில் இருந்து 10 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை


கொழும்பில் இருந்து மாகணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நேர அளவிளை பின்பற்றி கொழும்பில் இருந்து வட- கிழக்கு மாணாகணங்களுக்கிடையிலான பஸ் சேவை வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் கொழும்பில் இருந்து தினசரி காலை 7.20 மணிமுதல் 10.00 மணிவரை வடமாகாணம் யாழ்ப்பாணத்திற்கு பஸ் சேவை இடம் பெறும்.

அதே வேளை யாழ்பாணத்தில் இருந்து தினசரி காலை 7.20 மணிமுதல் 10.00 மணிவரை கொழும்பு பஸ்சேவை இடம் பெறும்

மேலும் கிழக்கு மட்டக்களப்பு, கல்முனை,அக்கரைப்பற்று  பிரதேசங்களுக்கு கொழும்பில் இருந்து தினசரி காலை 7.20 மணிமுதல் 10.00 மணிவரை பஸ் சேவை இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள

மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் இருந்து தினசரி காலை 7.20 மணிமுதல் 10.00 மணிவரை பஸ் சேவை இடம் பெறும்.

தினசரி ஊரடங்கு இரவு 10 மணிமுதல் காலை 04 மணிவரை அமுல்படுத்தப்படுவதல் குறிப்பிட்ட நேரப்பகுதிக்குள் பஸ் சேவை இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: