10 முகாம்களை உருவாக்கிய சஹ்ரான் ஹசிம்


சஹ்ரான் ஹசிம் நாட்டில் 6 இடங்களில் 10 முகாம்களை உருவாக்கி பயிற்சியினை வழங்கியுள்ளதாக ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 3 வது நாளாகவும் சாட்சியம் வழங்கிய குறித்த அதிகாரி ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முன்னர் எடுத்துக் கொண்ட காணொளி ஊடாக நாட்டில் தாக்குதல்களை நடத்துவதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புபிரிவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் அந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் தாக்குதலின் பிரதான சஹ்ரான் ஹாசிம் மற்றும் ஏனையோருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய இடங்கள் தொடர்பில் ஆணைக்குழு வினவியது.

இதற்கு பதிளளித்த அவர் நாட்டில் ஆறு இடங்களில் 10 முகாம்கள் நடத்தி செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

No comments: