தி்ருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 05 பேருக்கு விளக்கமறியல்


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் விவசாயிகளின் நீர் இறைக்கும் பம்களை திருடிய 17 வயது சிறுவனும் அவனின் சிறிய தந்தை மற்றும் அதனை வாங்கிய கடை உரிமையாளர் 3 உட்பட 5 பேரையும் எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி நேற்று சனிக்கிழமை (06) உத்தரவிட்டார்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியில்; விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் பயிர்களுக்கு நீர் இறைக்கும் பம்பளினால் நீர் இறைத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த நீர் பம்பகளை விவசாய பகுதிகளில் வைத்துவிட்டு வீடு சென்று வருவது வழமை இந்த நிலையில் இந்த பிரதேசத்தில் அண்மைகாலமாக 36 நீர் இறைக்கும் பம்கள் அங்கிருந்து திருட்டுப் போயுள்ளன.

இந்த நிலையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு (05) விவசாயி ஒருவரின் நீர் இறைக்கும் பம் ஒன்றை மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர் திருக் கொண்டிருந்த போது விவசாயிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்

இதனையடுத்து பொலிசார் ஆயித்தியமலை மணிபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் அவனின் சிறிய தந்தையும் கைது செய்ததுடன். திருடிச் சென்ற நீர் இறைக்கும் பம்களை ஏறாவூர் பிரதேசத்திலுள்ள கடைகளில் விற்கப்பட்டுள்ள நிலையில் 4 பம்பகளை மீட்டதுடன் திருட்டுப் பொருளை வாங்கிய கடை உரிமையாளர்கள் 3 பேரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று சனிக்கிழமை (06) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

No comments: