குளவி கொட்டுக்கு இலக்காகிய 05பேர் வைத்தியசாலையில்


(சதீஸ்)

பொகவந்தலாவ லின்போட் தோட்டபகுதியில் தொழில் புறிந்து கொண்டிருந்த 03 ஆண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி.தோட்டபகுதியில் இரண்டு பேர் உள்ளடங்கலாக ஜந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 09.30 மணியளவில்  இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தோட்ட பகுதியில் இந்த தொழிலாளர்கள் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மரத்தில் இருந்த குளவி கூட்டின் மீது களுகு வந்து மோதியதன் காரணமாக குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயமடைந்த தொழிலாளர்கள்
தெரிவித்தனர்

இதேவேலள கொட்டியாகலை என்.சி தோட்ட பகுதியில் உள்ள பெண் தொழிலாளர் ஒருவருக்கு அதிக குளவிகள் தாக்கியமையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்  குளவி தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் ஜந்து பேரும்
தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments: