Photos : கண்ணீருடன் வீடுகளை சுத்தம் செய்யும் மலையக உறவுகள்


(சதீஸ்)

சாமிமலை ஓல்டன் ,கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் வெள்ளப் ,பெருக்கினால்
பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிக்கப்பட்ட, குடியிருப்புகளை, சுத்தம்
செய்யும் நடவடிக்கையில் ,ஈடுபட்டு வருகின்றனர்

மஸ்கெலிய பொலிஸ், பிரிவிற்க்கு உற்பட்ட சாமிமலை ஓல்டன் கீழ்பிரிவு திட்ட பகுதியில் நேற்றைய, தினம் பெய்த அடை, மழையால் சாமிமலை கல்தோனி ஓயா பெறுக், கெடுத்ததன் காரணமாக 30 ,குடியிருப்புக்குள் வெள்ளநீர் ,உற்புகுந்தமையால் 102பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளநீரில், பாதிக்கப்பட்ட மக்களுடைய அனைத்து உடமைகளும்
பாதிக்கப்பட்டுள்ளதோடு ,அடையாள அட்டை, பிறப்புசான்றிதல், உலர் உணவு
பொருட்கள் பெறுமதியான, தளபாடங்கள் கால்நடைகள், ஆகியன நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை, வெளியிட்டுள்ளனர்.

ஏற்ப்பட்ட வெள்ளப், பெருக்கினால் பாடசாலை மாணவர்களின் சீருடைகள் பாதணிகள்என்பன, வெள்ளநீரில், அடித்து செல்லப்பட்டுள்ள தோடு, இன்றைய தினம்பாதிக்கப்பட்ட, மக்கள் தத்தமது, குடியிருப்புகளுல். தேங்கி நிற்கும்
கழிவுகளையும், சேறுகளையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே வேளை., பாதிக்கப்பட்ட. மக்களுக்கு மாற்றுடைகள், கூட இல்லை எனவும்பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்தபகுதியில் ,ஆற்றடி பிள்ளையார், ஆலயம் வெள்ளநீரில் முழுமையாக
மூழ்கியதனால் ,தோட்ட நிர்வாகத்தினூடாக ,கிருமி நாசினிகள் தெளிக்கும்
நடவடிக்கையில் ,ஈடுபட்டுள்ள இதேவேளை, நேற்றையதினம் ,ஏற்ப்பட்ட மண்சரிவிணால் ,02 குடியிருப்புகள் பாதிக்கபட்டுள்ளதோடு, குடியிருப்பில் இருந்த சிறுவனொருவன், பலத்தகாயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அதிக மழை காரணமாக, குறித்த தோட்டப்பகுதியில், வெள்ளநீரினால்
பாதிக்கபடுகின்ற மக்கள், குறித்து ,உரிய அதிகாரிகள் ,நடவடிக்கைகளை
மேற்கொண்டு, உரிய தீர்வினை பெற்றுத்தறுமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.






















No comments: