மக்கள் தற்காலிகமாக தங்கவைக்கபட்டுள்ள கலாசார மண்டபத்திற்கு பின்னால் பாரிய மண்சரிவு


(சதீஸ்)

பொகவந்தலாவ ரொப்கில் வானகாடு தோட்டத்தில் கலாசார மண்டபத்திற்கு
அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் தீ விபத்தில்
பாதிக்கபட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 51பேர் மீண்டும் பாதுகாப்பாக தங்க
வைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

19.05.2020.செவ்வாய்கிழமை காலையில் இருந்து பெய்த கடும் மலையின் காரணமாக இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தோட்டபகுதியில் தீ விபத்தில் பாதிக்கபட்ட 14 குடும்பங்களை
சேர்ந்த மக்கள் தோட்ட கலாசார மண்டபத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக தங்கிவந்த நிலையில் இன்றய தினம் பெய்த கடும் மலையின் காரனமாக ஏற்பட்டமண்சரிவினால் மேலும் குறித்த 14குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளனர்

இந்த அனர்த்ததினால் உயிர் சேதங்கள் எதுவூம் ஏற்படவில்லையெனவூம் குறித்தமண்டபத்திற்கு அருகாமையில் மீண்டும் ஒரு பகுதி சரிந்து விழ குடிய அபாயம்காணப்படுவதாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேலை பாதிக்கபட்டமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம்முன்னெடுத்து வருகின்றமைகுறிப்பிடதக்கது

No comments: