மாவட்டங்களுக்கியடையிலான போக்குவரத்து தொடர்பில் விசேட செய்தி


கொரோனா  தொற்று காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது தொடர்பில் தீர்வு கிடைக்கப்பெறும்  என்று  பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக பிரபல கொழும்பு தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில்  வர்த்தமானி அறிவித்தல் தயார் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரச மற்றும் தனியார்துறை அலுவலர்கள் அவர்களின் அலுவலக அடையாள அட்டையினை போக்குவரத்து பொலிஸாரிடம் காண்பிப்பதன் ஊடாக பயண அனுமதியை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடைமுறை  எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சேவைக்கு திரும்பும் அலுவலர்களுகான அறிவுறுத்தலாகும்.

அரச மற்றும் தனியார் அலுவலக பணியாளர்கள் அனைவரும் தங்களது நிறுவனங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட சேவை கடிதத்தினை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

No comments: