இரண்டுமாத ஊதியம் வழங்காமையினால் டீ புஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்


(நீலமேகம் பிரசாந்த்)கொத்மலை, பிரதேச, சபைக்குட்பட்ட எல்பொட, தோட்டத்தில், இயங்கிவரும் டீபுஸ் நிலைய ஊழியர்களுக்கு, இரண்டுமாத, சம்பளம் ,வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக, குறித்த, நிலையத்தில் வேலை செய்யும் ,ஊழியர்கள் முகாமையாளரை தொடர்புகொண்டு, கேட்டும் ,முறையான பதில் கிடைக்காமையினால் குறித்த, நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட, ஊழியர்கள், குறிப்பிடுகின்ற போது கொரோனா காலப்பகுதியில் வேலைகள், நிறுத்தப்பட்டிருந்தாலும் சம்பளம் கிடைக்குமெனவே கூறியிருந்தனர்.

இத்தொழிலை ,நம்பியே ,வாழ்க்கையை முன்னெடுக்கின்றோம் ஆனால் தற்போது சம்பளம் ,வழங்கப்படாமையினால், பாரிய பொருளாதார பிரச்சனைக்கு ,உள்ளாகியுள்ளோம்.எனவே 2, மாதங்களுக்கும் சம்பளம் வழங்காவிடின் டீபுஸ், நிலையத்துக்கெதிராக, போர்க்கொடி தூக்கவும் தயாராகியிருப்பதாக பாதிக்கப்பட்ட ,ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments: