மட்டக்களப்பில் ஊரடங்கு நேரத்தில் உழவு இயந்திரத்தில் மண் எடுத்துச் சென்ற ஒருவர் கைது .


-கனகராசா சரவணன்-

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக மண்ணை
உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (01) வவுணதீவு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனார்.


வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பொன்னாங்கானி தோட்ட பகுதியில் மண்னை உழவு இயந்திரத்தில் எடுத்து சென்ற போது பொலிசார் உழவு இயந்திரத்தை மடக்கி பிடித்து சாரதியை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர் .


இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஸர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

No comments: