வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை மக்கள் அவதானம் !நாட்டில் தற்போதுள்ள வெப்ப நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றில் இருந்து  நாளை பிற்பகல் வரை நாட்டில் நிலவக் கூடிய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழ் காணும் பிரதேசங்களுக்கு  41 முதல் 54 செல்சியஸ் வரையான வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவிய ல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் வட மேல் மாகாணம் கிழக்கு மாகாணம்  வட மத்திய  தென் மாகாணம் மேல் மாகாணம்  சப்ரகமுவ மாகாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி மன்னார், வவுனியா   மன்னார். மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 

இன்று மாலை அல்லது இரவு...

தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கரையோரங்களில் மழை பெய்ய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும்.

மேல் மத்திய சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி  மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மக்கள் இயற்கை அனர்த்தம் தொடர்பில் விழிப்புணர்வுன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் விழிப்புடன் செயற்படுமாறும் வங்களா விரிகுடாவில் தாழமுக்க நிலை காணப்படுவதாகவும்  வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: