மேல்கொத்மலை வான் கதவு திறப்பு டெவன்,சென்கிளேயர் நீர்வீழ்ச்சி பெருக்கெடுப்பு


(க.கிஷாந்தன்), (சதீஸ்)

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந் நிலையில் தலவாகலை பிரதேசத்தில் அதிக மழை பெய்து வருகின்றதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 18.05.2020 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.

மேலும் இன்று 12.30 மணிக்கு மேல் கொத்மலை அணைக்கட்டின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது இதனால் டெவன்,சென்கிளேயர் ஆகிய நீர்வீழ்ச்சிகளும் பெருக்கொடுத்துள்ளது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.











No comments: