ஊரடங்கினை மீறிய ஆயிரக்கணக்கானோர் கைது


இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 150 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 திகதி முதல் இது வரையிலான காலப்பகுதியில் 61,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 17,322 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய 18,496 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் 6,991 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது


No comments: