கேகாலை பகுதியில் சீரற்ற காலநிலை ஒருவர் உயிரிழப்பு


(கேகாலை சந்திர-சேகரம்)

இன்று கேகாலை பகுதியில் பலத்த காற்றுடனனான வானிலையை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

மேலும் பலத்த காற்றுடன் மழைபெய்ததாகவும் தற்போது கேகாலை பிரதேசத்தில் ஒரு சில இடங்களிரல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளார்

OLD UPDATED

கேகாலை பகுதியில் சீரற்ற கால நிலையனால்  மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 48 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று அதிகாலை  கேகாலை இம்புல்தெனிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் வீட்டிலிருந்த நபர் ஒருவர் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணமல் போயிருந்த வேளையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது

No comments: