மட்டக்களப்பில் கஞ்சாவுடன் தனியார் பஸ்சாரதி,நடத்துனர் கைது


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு ,பஸ்தரிப்பு நிலயத்துக்கு அருகிலுள்ள ,பகுதியில் கஞ்சாவை பொதி செய்து கொண்டிருந்த, தனியார் பஸ், சாரதி மற்றும் நடத்துனர்களை நேற்று சனிக்கிழமை (16) மாலை, கைது செய்துள்ளதுடன் 28, கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக மட்டு தலைமையக, பொலிசார் தெரிவித்தனர்.

இரகசிய பொலிசாருக்கு கிடைத்த, தகவல் ஒன்றையடுத்து குறித்த பகுதியை சம்பவதினமான, நேற்று மாலை, பொலிசார் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர் இதன் போது கஞ்சாவை,பொதி செய்து கொண்டிருந்த தனியார் பஸ்வண்டி சாரதி, மற்றும் நடத்துனரை கைது ,செய்ததுடன் சாததியிம் 14 கிராம் நடத்துனரிடம் 14, கிராமாக 28, கிராம் ,கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

இதில் கைது செய்த ,இருவரையும் நீதிமன்றில் ,ஆஜர்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments: