சுட்டு கொலை செய்யப்பட்டது மனித உரிமை செயற்பாட்டாளரின் வளர்ப்பு நாய் !


நீர் கொழும்பு பகுதியில் இன்று 07 காலை 6.00 மணியளவில் வளர்ப்பு நாய் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர் ஒன்றிய தலைவருமான  பிரிட்டோ பெர்ணான்டோவினால் வளர்க்கப்பட்டுவந்த ”மெக்ஸ்” என்று அழைக்கப்படும்  நாயே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.


குறித்த சம்மவம் தொடர்பில் தெரியவருவதாவது.

குறித்த செல்லப்பிராணியானது தனது காலைக்கடன்களை நிறைவேற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வீதியில் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டுள்ளது இதன் பின்னர் வீதிக்கு வந்த நாய் இரத்த  காயங்களுடன்  தடுமாறுவதை அவதானித்தேன் .


எனது வீட்டின் முன்பாக அது விழுந்து உயிரிழந்துள்ளது என  பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் 1199 பொலிசாருக்கு தெரிவித்த வேளை  விரைந்த நீர் கொழும்பு பொலிசார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments: