மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப மத்திய நிலையம் ஸ்தாபிப்பு


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை கல்வி வலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியை கற்பிப்பதற்கான மத்திய நிலையம் 55 இலட்சம் ரூபா செலவில் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சாதரணதரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்களையும் உயர்தரம் கற்கும் மாணவர்களுடன் சமாந்தரமாக தொழில்நுட்ப பாடங்களில் பயிற்றுவித்து பட்டதாரிகளாக மாற்றுகின்ற புதிய தொழில் தேர்ச்சி மிக்க கல்வித்திட்டமொன்றை கல்வியமைச்சின் மூலமாக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்திற்கு மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டு தற்போது இதற்கான கட்டிடம், குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் தேவையான உபகரணங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன. ஆளணி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வழமைக்கு திரும்பி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும். குல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாடசாலையின் அதிபர் ஏ.எல்.சக்காப் தெரிவித்தார்.

கற்கை நெறிக்கான மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளது. இங்கே இரண்டு வருட கற்பித்தல் பயிற்சியை பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கு-

-(NVQ-IV) தேசிய தொழிற் தகைமை மட்டம்-04க்கு உரிய சான்றிதழ் வழங்கப்படுவதோடு தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்விகற்று எதிர்காலத்தில் பட்டதாரிகளாக வருவதற்கான சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.


No comments: