கிழக்கில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை


தொல்பொருட் சான்றுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்த்த ஒன்றாக இலங்கையினை பொறுத்தமட்டில் காணப்படுகின்றன.

அரசாட்சி நிறைவு பெற்று செல்லும் தருணங்களில் மன்னர்கள் புதையல்களை பாதுகாத்துவிட்டு  தங்களது வாழ்வியல் தொடர்பில் கல்வெட்டுக்களை உருவாக்கி விட்டு செல்வர் ..


அவர்கள் வாழ்ந்த இடங்கள் தற்போது சிதைவடைந்து காணப்படுகின்றது அதுமட்டுமல்ல அதன அழிப்பதற்கான எத்தணிப்புக்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செயலாளர் இராணுவத்தளபதி மற்றும் கிழக்கு ஆளுனர் உள்ளிட்ட குழுவினர் கிழக்கின் அம்பாரை பொத்துவில் பகுதிகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் வருகை தந்து புராதான இடங்ளை பார்வையிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில்  கிழக்குமாகாண தொல் பொருட்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments: