மேல்கொத்மலையில் பெண்ணை காப்பாற்ற நீரில் பாய்ந்த இளைஞனை தேடும் பணி தொடர்கிறது


(சதீஸ்)

மேல் கொத்மலை, நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள குதித்த பெண்ணைதலவாக்கலை, பொலிஸ் ,நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்துவினால் காற்றாப்பட்டுள்ளதுடன் பெண்ணை காப்பாற்ற போரடிய  இளைஞனை தேடி மீட்கும் பணியில் தொடர்ந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுட்பட்டு
வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் 21/05 காலை 10 மணியளவில் தலவாகலைபகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக கொத்தமலைநீர்தேக்கத்தில் குதித்துள்ளார்
இதனை கண்ட அவ்வழியில் சென்ற 32 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணைகாப்பாற்ற நீர்தேக்கத்தில் பாய்த்து அந்த பெண்ணை மீட்க போராடியுள்ளார் இந் நிலையில் விரைந்து செயற்பட்ட தலவாகலை பொலிஸ் நிலைய பொருப்திகாரிருவான் பெர்னாந்து உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணை மீட்டுசிகிச்சைக்கா லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

இருந்த போதிலும் குறித்த பெண்ணை காபாற்ற நீர்தேக்கத்தில் குதித்த இளைஞனைமீட்க பொலிஸார் தொடர்ந்து தேடுதல் பனியில்ஈடுபட்டுள்ளதுடன் ஆற்றிலுள்ளசேற்றில் சிக்குண்டிருக்கலாம் என தலவாகலை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.No comments: