அம்பாறையில் ஆலம் விழுதுகள் அமைப்பு அங்குரார்பணம்


(வி.சுகிர்தகுமார்)  

அரசாங்கத்தின் ,சௌபாக்கியா வீட்டுத்தோட்ட மரநடுகை பசுமைப்புரட்சி வேலைத்திட்டத்திற்கு இணைவாக, தனியார் தொண்டு அமைப்புக்களும் வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் ,செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக அம்பாரை ,மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பானது கனடா உதவி அமைப்பின் நிதியுதவியுடன் ,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண், தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளையும், நாற்றுக்களையும் இன்று வழங்கி வைத்ததுடன் ,70 குடும்பங்களுக்கான நிவாரணத்தையும் வழங்கி வைத்தது.

அம்பாரை மாவட்டத்தில் ,ஆலம் விழுதுகள் ,அமைப்பானது தனது பணியை ஆரம்பித்துள்ள நிலையில் முதலாவது ,அங்குரார்ப்பண நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச, கலாசார மண்டபத்தில் இன்று நடாத்தியது.

அமைப்பின் தலைவரும் ,ஓய்வுபெற்ற ,அதிபருமான எம்.கிருபைராஜா தலைமையில் ,இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் பிரதம, அதிதியாக,கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் மற்றும், அமைப்பின் செயலாளர் ஓய்வுபெற்ற அதிபர் கே.இரத்தினவேல், பொருhளர் ஓய்வு ,பெற்ற ,கணக்காளர், என்.குகதாசன், அமைப்பின் உறுப்பினர் உதவிக்கல்விப்பணிப்பாளர் ,எஸ்.ஸ்ரீதரன், அமைப்பின் உறுப்பினர் ,ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார் ,அமைப்பின் உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்டவர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

நெருக்கடிகளைப் ,படிக்கற்களாக ,மாற்றுவோம் எனும் தொனிப்பொருளுக்கமைய ,வலுவிழந்துள்ள ,மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களை சொந்தக்காலில் நிறுத்;தும், முயற்சியை முன்னெடுத்துள்ள, ஆலம் விழுதுகள் அமைப்பானது ,பல்வேறுபட்ட உதவித்திட்டங்களையும் மக்களுக்கு எதிர்காலத்தில் வழங்க முன்வந்துள்ளது.

சிறந்த வீட்டுத்தோட்டத்தின் ,மூலம் பல்வேறு பரிசில்களை வென்றெடுப்பதுடன்,  விவசாயம் எனும் ,பசுமைப்புரட்சியை ஏற்படுத்தி காட்டுவோம் எனும், நோக்கோடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டமானது விரைவில் அம்பாரை மாவட்டம் முழுவதுமாக, விஸ்தரிக்கப்படவுள்ளமையும், இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலந்து ,கொண்ட பயனாளிகளுக்கு, கத்தரி ,கொச்சி போன்ற பயிர்கன்றுகளும் பல்வேறு, விதைகளும், தேசிமரக்கன்றும் 5கிலோ அரிசிபையும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கருத்து ,தெரிவித்த பிரதேச ,செயலாளர் ,ஆலம் விழுதுகள் அமைப்பின் பணியை பாராட்டுவதுடன் ,தாம் எ,திர்பார்த்த திட்டத்தை அமுல்படுத்தியமையிட்டு ,மகிழ்ச்சியடைவதாகவும், கூறினார். ,மேலும்; எதிர்காலத்திலும் குறித்த அமைப்பினரின் பணிக்கு ,த,மது பூரண ஒத்துழைப்பபை வழங்கவு,ள்ளதாக,வும் குறிப்,பிட்டார்.,

No comments: