முழுமையாக்கப்படாத வீடுகளுக்கு எங்களால் குடியேற முடியாது டன்சினன் மத்தியப்பிரிவு மக்கள் போர் கொடி


(நீலமேகம் பிரசாந்த்)

கொத்மலை பிரதேச, சபைக்குட்பட்ட டன்சினன், மத்தியப்பிரிவு தோட்டத்தில் இந்திய ,அரசாங்கத்தால் கடந்த, வருடம், மகாத்மாகாந்தி புர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு, அதில் ஒரு, பகுதியான 136 வீடுகள் டன்சினன் மத்தியப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின், போது நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கு, நீர்வசதி,பாதை வசதி,,வடிகாண்கள் வசதி,மதில் போன்றன ,இன்றுவரையில் முழுமையாக்கப்படாமல், இருப்பதோடு வீடுகளும் தற்போது சிதைவுக்குள்ளாகும் நிலை, எட்டியுள்ளது.

இந்நிலையில், தோட்ட நிர்வாகம் லயன் பகுதிகளில் இருந்து ,கட்டப்பட்ட வீடுகளுக்கு 20ம் திகதிக்கு முன்னர் செல்ல ,வேண்டுமெனவும் ,அவ்வாறு செல்லாவிடின் ,சட்ட, நடவடிக்கை எடுப்பதாவும் ,அறித்தல் கடிதம் ,அனுப்பியுள்ளனர்.எவ்வித, வசதிகளும் அற்ற வீடுகளுக்கு எவ்வாறு ,செல்வது என டன்சினன் மத்தியப்பிரிவு மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

கடந்த, அரசாங்கத்தில் நிவர்த்தி செய்யப்படாத, குறைகளை, இவ்வரசாங்கம் முன்னெடுத்து ,வீடுகள் முழுமையாக்க, நடவடிக்கை ,எடுக்கும், வரை அவ்வீடுகளுக்கு ,செல்ல ,முடியாது. கட்டாயம் செல்ல ,வேண்டுமென, தோட்ட நிர்வாகம் அடாவடி ,செய்தால் தோட்ட நிர்வாகத்திற்கெதிராக, போர்க்கொடி, தூக்கவும் தயார், என டன்சினன், தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்,


No comments: