அரசியல் பிரமுகர்கள் ஆறுமுகன் தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி


(சதீஸ்)

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடன் கொட்கலை சீ.எ.எப் மண்டபத்தில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ளது

அன்னாரின் பூதவுடலுக்கு பொருந்திரலான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திவரும் இவ்வேலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அம்பாறை மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டகளப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் , தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, சிவனொளிபாதமலை பிரதம தேரர் உட்பட பலர் அஞ்லியை செலுத்தினர்

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடன் மதியம் 1.30 மணிக்கு கொட்டகலை யிலிருந்து அட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு 4.30 மணிக்கு அக்கினியுடன் சங்கமம்மாகவுள்ளது.
No comments: