மண்மேடு சரிந்து விழுந்ததில் கேகாலை பகுதியில் ஒருவர் உயிரிழப்பு


கேகாலை பகுதியில் சீரற்ற கால நிலையனால்  மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 48 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று அதிகாலை  கேகாலை இம்புல்தெனிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் வீட்டிலிருந்த நபர் ஒருவர் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணமல் போயிருந்த வேளையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது

No comments: