அரசியல் கைதிகளின் விடையத்தில் சுயநலம் கலக்கின்றதா


(அகத்தியன் அரசியல் பார்வை)

#SriLanka, #Politica, #SLpolitical, #TNA, #Election2020

கொரோனா வைரஸ், அச்சம் காரணமாக நடைபெற இருந்த பொதுத்தேர்தல்
பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு, கொண்டுவரும், செயற்படு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில், தற்போது தமிழ் ,அரசியல் களத்தில் சூடுப்பிடித்துள்ள , அதிகம் பேசு பொருளாக மாறியுள்ள விடையமாக அரசியல், கைதிகளின் பெயர்பட்டியல் பிரதமிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள, விடையம் , காணப்படுகின்றது.

நேற்றைய, தினம் அமைச்சர் டக்ளஸ், தேவானந்தா பிரதமரை அவரது இல்லதில் சந்தித்து, அரசியல் கைதிகளின் விடையம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந் நிலையில் நேற்றையதினம் தமிழ், தேசிய கூட்டமைப்பின் ,ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்,.ஏ.சுமந்தின்  பிரதமரை, அவரது இல்லத்தில் சந்தித்து அரசியல் கைதிகள், விடையம், தொடர்பிலும் ஏனைய விடையங்கள் ,தொடர்பிலும்  கலந்துரையாடினார்,

இந் நிலையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான, எம்.ஏ.சுமந்தின் , தனது ஊடகசந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு முதல் அமைச்சராக இருந்த காலத்தில் அரசியல், கைதிகள் விடையம் தொடர்பி்ல் அக்கரை காட்டவில்லை என்றும் தாம் இது தொடர்பான, பூரண விடையங்களை திரட்டி தாம் பிரமரை சந்திக்கவிருந்த நாளில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சந்தித்திருப்பது திட்டமிடப்பட்ட செயல் என்றும் இது ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடு, என்றும் தனது ஊடகசத்திப்பில், குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரரேமசந்திரனது ஊடக சந்திப்பில்.அவரது கருத்துக்கள் , இவர்கள் இருவரினதும் செயற்பாடு அரசிய,ல் நோக்கத்திற்காகவே என்ற. கோணத்தில் அமைந்திருந்தது.

இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விடையம் என்வெனில் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும் என்ற நோக்கம் உண்மையானதாக இருந்தால் அந்த செயற்பாட்டினை யார் முன்னெடுத்தாலும் நோக்கம் நிறைவேறவேண்டும், என்ற எண்ணப்பாடு எழவேண்டுமே தவிர முன்னெடுப்பவர்களை ,சுட்டிக்காட்டி குறை கூறவேண்டும் என்றோ அல்லது என்னால் தான் இது நடக்கவேண்டும் என்ற சுயநல எண்ணப்பாடுகள், விலகவேண்டும், விட்டுக் ,கொடுப்பற்ற எண்ணப்பாடுகள் இருக்கும் பட்சத்தி,ல் மேற் குறித்த ,நோக்கமானது சிதறடிக்கப்பட்டுவிடும் என்பது இதில் இருந்து புலனாகின்றது.

குறி்த்த செயற்பாடுகளை, நோக்குமிடத்து தனிநபர் ஆதிக்கம் செலுத்த விரும்பும் விடையமாக ,அரசியல் கைதைிகளின் விடையம், அமைந்திருப்பது புலனாகின்றது.

அரசியல், கைதிகள், விடையத்தில ஒற்றுமையற்ற செயற்பாடே இங்கு தாக்கம் செலுத்துகின்றதே, தவிர நோக்கத்தினை நிறைவேற்றும் தன்மை காணப்படவில்லை ,என்பது நிதர்சனமான உண்மையாக புலனகின்றது இறுதியில் ஒருவருக் கொருவர் குற்றம் சாட்டி காலத்தினை வீண்விரயம் செய்யும் நிலைப்பாடாக இது மாறிவிட வாய்ப்புக்கள் உண்டு.

தேர்தல் நெருக்கும் வேளையில் இச் செயற்பாடானது இடம் பெறுகின்றமை அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க ,விடையமாக பார்க்கப்படுகின்றது.


No comments: