திறக்கப்பட்ட மதுபானசாலைகள் மூடப்பட்டதுடன் பின்னர் திறக்கப்பட்டது


(வி.சுகிர்தகுமார்)  

அம்பாரை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி ,திறக்கப்பட்ட மதுபானசாலைகள் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலனின் தலையீட்டினால் உடனடியாக மூடப்பட்டதுடன், பின்னர்; திறக்கப்பட்டது.

இன்று காலை ,அக்கரைப்பற்றில் உள்ள இரு மதுபானசாலைகளும் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, கிடைத்த தகவலை அடுத்து குறித்த மதுபானசாலைகளுக்கு, சென்ற பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையிலான ,பொதுச்சுகாதார அதிகாரிகள்; தகவலை உயர்மட்ட அதிகாரிகளுக்கு, அறிவித்ததுடன் மதுபான சாலைகளை உடன் மூடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதற்கமைவாக, குறித்த, இரு மதுபான சாலைகளும் மூடப்பட்டதுடன் அக்கரைப்பற்று ,பொலிசாரும் வரவழைக்கப்பட்டு அங்கு குழுமியிருந்த மக்கள் அகற்றப்பட்டனர்.

இது தொடர்பில் கருத்து, தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்,,.அகிலன் மதுபான சாலைகள் திறப்பது தொடர்பில் தமக்கு எவ்வித எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்பதோடு தமது உயரதிகாரிகளுக்கும் இது, தொடர்பில், தகவல் வழங்கப்பட்டதுடன் அவர்களும் குறித்த விடயம் ,தொடர்பில் அறிந்திருக்கவில்லை என கூறியதாக குறிப்பிட்டார்.

மேலும் சாதாரண விற்பனை நிலையங்களில் பேணப்படும் கைகழுவுதல் போன்ற குறைந்த அடிப்படை சுகாதார நடைமுறைகள் கூட இங்கு பின்பற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் ,மதுபானசாலைகள் திறக்கப்பட்டு சில நிமிடங்களில் அதிகளவான மக்கள் அவ்விடத்தில், ஒன்று கூடியதுடன் ,கொரோனா அச்சுறுத்தலையும் மறந்து சமூக இடைவெளியையும் பேணாது, மிகவும் மோசமான நிலையில்; நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.,  இதன் அடிப்படையில் ,மதுபானசாலைகள், மூடப்பட்டதுடன் பின்னர், பொலிசாரின், கண்காணிப்புடன் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

No comments: