கபில் வத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்


முருக பெருமான் இலங்கையில் ,தவமியற்றி சக்திகளை பெற்று ஆதி சமாதியாகி, காலம் காலமாக, சித்தர்கள் பாதுகாத்து வரும் அபூர்வ சித்த வனமாகிய கபில்வத்தைக்கு

கபிலித்தை என்று அழைக்க படும் ,கபில்வத்தை மகா சித்தர்கள் வனம். - யால சரணாலயம் - மொனராகலை மாவட்டம், இலங்கை.
Kabiliththa Murugan Temple - Yala Forest - Monaragala District, Srilanka.

இது யால வனவிலங்குகள் ,சரணாலயத்தின் மத்தியில் கும்புக்கன் ஆற்றின் தென்கரையில் மிகப்பண்டைய, காலத்தில் முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில்.

இங்கு தான் முருகப்பெருமான், ஆதியில் ,தவமியற்றி சக்திகளை பெற்றதாக வரலாறு சொல்கிறது. பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின் தனது தங்க வேலை ,எறிந்ததாகவும், அந்த வேல் ஓர் புளிய மரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளிய மரத்தின் கீழ் ஆதி வேடர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கட்டிடங்கள் இல்லாத, ஐயர், பூசாரி இல்லாத, மிகவும் ,சக்தி ,வாய்ந்த கோயில் இது. 12 சிற்றாறுகளைக் கடந்து 32 கி.மீ ட்ராக்டர் ,வண்டியில் மிக கடினமாக பயணம் செய்தே இவ்சித்தர்கள் வனத்தை அடைய முடியும்.

இன்றும் யானைகள் ரூபத்தில், தேவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் ,வந்து இங்கு முருகனை வழிபடுவதை கண்ணுராக காணலாம். இன்று வரை சிலரால் மட்டுமே செல்லக்கூடிய அபூர்வ வனம். முருகன் அருள் இருந்தால் மட்டும் இவை சாத்தியம்.

ஆதியில் கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் , நவ பாஷாண வேல் இங்கு தான் இருப்பதாக பலரால் நம்ப படுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதி கதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் , மஹா வம்ச நூல்கள் குறிப்பிடுகிறது.

இன்றும் இங்கு நவகோடி சித்தர்கள், தவமிருப்பதாக இன்றும் அனைவராலும் சொல்லப்படுகிறது. மேலும் இலங்கையில், அன்று முதல் அரசாங்க சிம்மாசனத்தில் யார் அமருவதாக ,இருந்தாலும் இங்கு சென்று வழிபட்ட பின் தான் தங்கள் அரச பதவிகளை ஏற்பது வழக்கம்

இவ்விடத்திட்கும் ,வேற்று கிரக, வாசிகளுக்கும், தொடர்பு உள்ளதாக இன்றும் நம்பப்படுகிறது

முறையாக விரதமிருந்து, இங்கு சென்று வந்தால் அடுத்த வருடத்துக்குள் நினைத்து சென்ற காரியம் ,நடக்கு,ம். உங்கள் வாழ்க்கையே மாறும் என்பது அங்கு சென்று வந்த அனைவரினதும் அனுபவம் , எங்கள் அனுபவமும் கூட.

முகநுால் நண்பரின் பதிவில் இருந்து புகைப்படங்கள்
விடையம் சித்தர்களின் குரல் முகநுால்


No comments: