வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லீம்கள் ஒத்துழைக்க வேண்டும் -சுரேஷ்


(கனகராசா சரவணன்)

முஸ்லீம் மக்கள் :புத்திஜீவிகள், அரசயல் தலைவர்கள் ,மௌவிகள் இனியாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது என விளங்கிக் கொண்டு வடக்கு கிழக்கை இணைக்க ஒத்துழைக்க வேண்டும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கிழக்கிலே தமிழர்;களுக்கு மட்டுமல்ல முஸ்லீம் மக்களின் இருப்புக்கு கேள்விக் குறியான நிலை ஏற்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார்.

கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட் செயலணினை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; ஊடகங்களுக்கு நேற்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்...

கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமப்பை மேற் கொள்ளுவதற்காகவே தொல்லியல் திணைக்கள அனுசரனையுடன் இந்த ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது இது கிழக்கில் ஒரு மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது

கடந்த காலங்களிலே கிழக்கு மாகாணத்திலே சில இனவாத முஸ்லீம் அரசியல் வாதிகள் தலைவர்களின் செயற்பாட்டின் காரணமாக தமிழ் முஸ்லீம் மக்களுடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இதனால் பல கசப்பான சம்பவங்கள் நடந்தேறியிருந்தது

தமிழ் மக்களுடைய நீண்ட நெடுங்கால போராட்டத்தை ஒழிக்க முஸ்லீம் மக்களை சிங்கள தேசம் பாவித்து அந்த காலப்பகுதியில் செயற்பட்ட சில இனவாத முஸ்லீPம் தலைவர்களின் ஒத்துழைப்புடன் ஊர்;காவல் படை என்ற பேர்வையில் பல முஸ்லீம் இளைஞர்களை இணைத்து தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மீது பல படுகொலைகளை செய்து 40 மேற்பட்ட கிராமங்கள் நாமமே இல்லாது அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உள்ளது

கடந்த 70 வருட தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலே தமிழர்களின் சில இடங்களை அபகரிப்பதற்கு சில இனவாத முஸ்லீம் தலைவர்கள் சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து இயங்கியதன் மூலம் சிங்கள மக்களுடன் தாங்கள் சம உரிமையுடன் வாழலாம் என போலியாக அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு வெளிப்படுத்தினர்.

ஆனால் 21 ஏப்பிரல் குண்டு தாக்குதலின் பின்னர் ஆவது முஸ்லீம் அப்பாவி மக்கள் விளங்கி கொள்ள வேண்டும் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் கூட தொல்லியல் என்ற பேர்வையில் சிங்கள பௌத்த மயமாக்கல் என்ற தூர நோக்கு சிந்தனையுடன் சிங்கள தேசம் செயற்பட்டுள்ளது என்பதுடன்

சிங்கள மக்களை மையப்படுத்தி தான் இனி திட்டங்களை சிங்கள அரசு மேற்கொள்ளுமே தவிர முஸ்லீம் மக்களை பாதுகாப்பதற்கான தனிதிட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது

எனவே இனியாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது என விளங்கிக் கொண்டு முஸ்லீம் மக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் ,மௌவிகள் விளங்கி கொண்டு வடக்கு கிழக்கை இணைப்பதற்கும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியலல் அபிலாiஷகளை நிறைவேற்றுவதற்கும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் இணைக்கு கொள்ள வேண்டுமே தவிர இதற்கு முரணாக செயற்பட்டால் எதிர்காலத்தில் கிழக்கிலே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லீம் மக்களின் இருப்புக்கு கேள்விக்குறியான நிலை ஏற்படும்

கடந்த கால சிங்கள ஆட்சியாளர்களினால் எப்படி தமிழர்;களையும் முஸ்லீம் களையும் பிரித்து ஆளவேண்டும் என்ற தந்திரோபயத்தின் மூலம் அவர்கள் செயற்பட்டு வந்துள்ளனர் என கற்றுக் கொண்ட பாங்கள் மூலமாக முஸ்லீம் மக்கள் அரசியல் வாதிகள் அரசியல் தலைவர்கள் நன்கு உணர்ந்து செயற்படவேண்டும் என்றார்.

No comments: