அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பிரதமரின் கருத்து வரவேற்கத்தக்கது -கோடீஸ்வரன்


(வி.சுகிர்தகுமார்) 

அரசியல் கைதிகள் ,விடுதலை தொடர்பில் சிறந்த முடிவினை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தமை ,மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற ,உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கைதிகள் விடுதலை, தொடர்பில் கட்சி பேதங்களின்றி ஒன்றிணைந்து ,செயற்படுவதன் மூலமே வெற்றியடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் கைதி ,விடுதலை மற்றும் பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் இன்று அக்கரைப்பற்றில், உள்ள அவரது, அலுவலகத்தில், இடம் பெற்ற ஊடகவியலாளர், சந்திப்பொன்றின்போதே ,அவர், இவ்வாறு கூறினார்.

அவர் ,தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ...கடந்த 04ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடனான ,சந்திப்பின்போது ,பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது. இதன்போது கொரோனா, தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் ,அரசியில் கைதிகள் விடுதலை, வடகிழக்கில் உள்ள தமிழர்களின் காணி விடுவிப்பு அரசியல் தீர்வுத்திட்டம் ,அபிவிருத்தி உள்ளிட்ட ,அடிப்படை பிரச்சினை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

இதில் ,முன்வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினையான அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ,சிறந்த முடிவை தருவதாக பிரதமர் வாக்குறுதியளித்தார். ,அந்த வகையில் நாம் மகிழ்வடைகின்றோம்.

அத்தோடு ,அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,சுமந்திரன் மற்றும் ,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பிரதமரிடம் கையளித்தனர்.

இவ்வாறு நாம், பேசியதன் பிற்பாடு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசியல் ,கைதிகள் தொடர்பில், தமது மகஜரை பிரதமரிடம் கையளித்துள்ளார். இதை அவர் எப்போதோ ,செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் அமைச்சராகவும் பாராளுமன்ற, உறுப்பினராகவும் பாராளுமன்றத்தில் பல தடவைகள், இருந்துள்ளார். ,அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ,அவர் ,தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரதமருடன் பேசி முடிவைக்கண்டதன் ,பின்னர் தனது அரசியல் நோக்கத்திற்காக இப்போது பேசுகின்றார்.

இருப்பினும் , அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதங்களை, மறந்து ஒட்டுமொத்த,மாக, இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். ,அவ்வாறு ,செயற்படுகின்றபோதே, அவர்களது விடுதலை நடைபெறும் எனவும் இதன் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments: