கிழக்கில் கடல் கொந்தளிப்பினால் வாழ்வாதரமிளந்த மீனவர்கள்


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கிழக்கு மாகாணத்தின் கரையோர பிரதேசங்களில், தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றன., இதனால் தமது வாழ்வதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, ,மருதமுனை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு ,போன்ற கரையோர பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள பலத்த காற்றுடனான ,கடல் கொந்தளிப்பு காரணமாக கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடித் ,தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான மீனவர்கள், நிர்கதியான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கரையோரங்களில் நிறுத்தி, வைக்கப்பட்டுள்ள ,மீன்பிடிப் படகு இயந்திரங்கள், கரைவலைத் தோணிகள்,, பெறுமதியான ,வலைகள் என மீன் பிடி உபகரணங்களும், கடலலையினால் காவுகொள்ளப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள ,மீனவர்கள் நேற்று (21), கடற்கரைப் ,பிரதேசத்தில் ஒன்று சேர்ந்ததுடன் கடல் ,கொந்தளிப்பு ,காரணமாக ஏற்பட்டுள்ள, பாதிப்புக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர்,


கடந்த ஒரு வாரகாலமாக, எமது மீன்பிடித் தொழில் ,பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயந்திரப் படகுகள் உடைந்து, கரைக்கு வீசப்பட்டுள்ளன., நங்கூரமிட்டு வைக்கப்பட்டுள்ள ,இயந்தரப் ,படகுகளை பார்வையிட முடியாத நிலையும் காணப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் ,ஏற்பட்டுள்ள அசாதரண சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் 5000.00, ரூபா கொடுப்பனவு ,வழங்கப்பட்டு வரும் நிலையில், இயந்திரப்படகு ,உரிமையாளர்கள் ,கைவிடப்பட்டுள்ளமை வேதனையளிக்கிறது., சில பிரதேச ,செயலகங்களில் எமக்கு கொடுப்பனவு இல்லை என மறுக்கிறார்கள். 


எனவே இது விடயத்தில், ஜனாதிபதி, பிரதமர் ,மற்றும் கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டோர் தலையிட்டு ,உடனடித் தீர்வை ,பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் மீனவர்கள் ,முன்வைத்தனர்.


No comments: