பத்தனை கொட்டகலை பகுதியில் வீதி விபத்து


(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் ,பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் 16.05.2020 அன்று மதியம், 12.30 மணியளவில் டிப்பர் ரக லொறி மற்றும் ,மோட்டார், சைக்கிள் நேருக்கு ,நேர் மோதி ,ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான ,மோட்டார் சைக்கிள் சாரதி கொட்டகலை வைத்தியசாலைக்கு, அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன், மாவட்ட வைத்தியசாலைக்கு ,மாற்றப்பட்டுள்ளதாகவும், வேனின் சாரதி கைது ,செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் - ,நுவரெலியா, ஏ -7 பிரதான வீதியில், நுவரெலியா ,பகுதியிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற ,லொறி ஒன்றும் அட்டனிலிருந்து, தலவாக்கலை பகுதியை ,நோக்கி சென்று ,கொண்டிருந்த மோட்டர் சைக்களும், கொட்டகலை கொமர்ஷல், பகுதியில் ,இவ்வாறு, மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ,மோட்டார் ,சைக்கிளை ,செலுத்தி ,சென்ற, சாரதியே கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்துடன் ,தொடர்புடைய லொறி, ,,மோட்டார், சைக்கிள்,ஆகியன பொலிஸ் ,நிலையத்திற்கு, கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன் ,,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: