வட்டவலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதால் கொழும்பு செல்ல வேறுபாதை பயன்படுத்த வேண்டுகோள்


(சதீஸ்)

மலையகத்தில் தொடரும் கடும் மலையின் காரணமாக ஹட்டன் கொழும்பு பிராதான வீதியின் இன்று 12மணியவில்  வட்டவலை பகுதியில் பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது

இதனால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின போக்குவரத்து
பாதிக்கபட்டுள்ளதாகவும்  குறித்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள்
மாற்று வீதியினை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிளுக்கு பணிப்புரை
விடுத்துள்ளனர்.

 குறித்த கற்பறையினைஅகற்றும் நடவடிக்கைக்காக இராணுவம்  மற்றும் பொலிஸார் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.

 குறித்த பகுதியில் 25வீடுகள வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையினால் குறித்த குடும்பங்களை  சேர்ந்த 88பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


No comments: