நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி கொட்டகலையில் சம்பவம்


(க.கிஷாந்தன்)

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட, நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார் என திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெய்து வரும் அடைமழையால் தனது ,ஆடுகள் இருந்த பட்டி மீது மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது., இதனையடுத்து பட்டிக்குள் இருந்த ஆடுகளை காப்பாற்றுவதற்காக குறித்த ,நபர் சென்றுள்ளார்.

எனினும், வெள்ளம், பெருக்கெடுத்ததால், மூன்று ஆடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன., அவரும் தவறி நீரில், விழுந்துள்ளார். எனினும், தீவிரமாக செயற்பட்ட, பிரதேச வாசிகள் ,அவரைக் காப்பாற்றி, வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.No comments: