அம்பாறை ஆலையடிவேம்பில் சட்ட விரோத மதுபானம் உற்பத்தி செய்த நபர் கைது !
(அகத்தியன் செய்திப்பிரிவு)

அக்கரைப்பற்று பொலிஸ் பாிவிற்குட்பட்ட ஆலையவேம்பு வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு சட்டவிரோத மது பானம் உற்பத்தி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து  மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது  80 லீற்றர் சட்டவிரோத மது பானத்தினையும் அதை தயார் செய்வதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியிருந்ததுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்தசந்தேக நபர்  இன்று (13) அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது  குறித்த வழக்கினை விசாரித்த அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்ற நீதிபதி  எம்.எச். மொஹம்மட் ஹம்சா அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோ மதுபானங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் குடும்ப வறுமை ஏற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபருக்கு 70,000 (எழுபதாயிரம் ) ரூபாய் தண்டப்பணம் விதித்துடன் மீண்டும் இச் செயற்பாட்டில் ஈடுபட்டால சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எசசரித்துள்ளார்.


No comments: