உயர்தரப் பிரிவு மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை


(அகத்தியன் செய்திப்பிரிவு)

உயர்தரப்பரீட்சை ,மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கவனம்
செலுத்தும் முகமாக, உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பிக்க, அரசாங்கம் நடடிவக்கை மேற் கொண்டு வருவதாக ஆலையடிவேம்பு பிரதேச ,சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.எஸ்.அகிலன் தெரிவித்தார்.
ஒவ்வொரு, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, காரியாலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளை,  (எம்.ஓ.எச்) ,ஊடாக சுகாதார, ஆலோசனைகளைப் பெற்று கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள், இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பிற்பாடு உயர்தர பிரிவு, மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலகளை ,மீள ஆரம்பிக்கும் ,நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆலையடிவேம்பு பிரதேச ,சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.எஸ்.அகிலன்  எமக்கு தெரிவித்தார்.

தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா, தொற்று இல்லை என்றும், தொற்றுக்குள்ளாகும் சந்தேகத்தில் ஒரிருவர் காணப்பட்டிருந்தாலும் ,குறித்த நபர்களுக்கு, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ,குறிப்பிட்டார்

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் ,திருக்கோவில் ,வலையக்கல்வி பணிப்பாளர் மற்றும் ,பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் , பெற்றோர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடலின் போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கு, மாத்திரம் ,படசாலைகளை மீள, ஆரம்பிக்க முடிவு ,,செய்துள்ளதாக  , எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.,

No comments: