நெல், அரிசியை பதுக்கி வைப்பவர்களை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை


நுகர்வோர் ,அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோருக்கு அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதனை, தடுப்பதற்காக, நெல், அரிசியை தட்டுப்பாடின்றி வினியோகிக்குமாறு வர்த்தகர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அரிசியை பதுக்கி வைக்கும் நிறுவனங்கள், அல்லது, நபர்கள் தொடர்பில் உடடி சுற்றி வளைப்புக்களை மேற் கொள்ளவுள்ளதாகவும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேற் குறித்த அரிசி, மற்றும், நெல்லினை பதுக்கி ,வைத்திருப்பவர்களுக்கு படியாணை இன்றி கைது செய்ய, முடியும் என்று, நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது

மேலும் 1977 ,என்ற ,இலக்கத்திற்கு, தொடர்பு கொண்டு மேற் குறித்த பதுக்கல் சம்பவங்களை அறிவிக்க முடியும் என்றும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது

No comments: