தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இராணுவத்தளபதி !


இதுவரையில் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் 4665 (நாக்காயிரத்து அறுநுாற்று அறுபத்தைந்து பேர்) பேர் 36 தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்  தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் 

இராணுவ கண்காணிப்பின் கீழ் 25 நிலையங்களும் 
கடற்படையின் கீழ் 06 நிலையங்களும் 
விமானப் படையின் கண்காணிப்பின் கீழ் 04 தனிமைப்படுத்தல் நிலையங்களும் இருந்து வருகின்றது.

கொழும்பிலிருந்து மலையத்திற்கு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 200 பேர் தமது வீடுகளுக்கு திரும்பயுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் வவுனியா மகா கச்சகொடி பகுதியை சேர்ந்த ஒருவர்  விடுமுறைக்காக வந்திருந்த நிலையில் அவருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து  குறித்த கடற்படை வீரரின்  கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது.

வவுனிய  மகா கச்சகொடி கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் நேற்றைய தினம் சுகாதார திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: