நாட்டில் பல்வேறு அபாய எச்சரிக்கைகள்


நாட்டில் இன்று பல்வேறு அபாய எச்சரிக்கைகள் வீடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் சற்று அவதானமாக தங்களின் அன்றாட கடமைகளில் ஈடுபடும் படியாக கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

வங்காள விரிகுடாவில் தென் கிழக்கு கடற்பிராந்தியத்தி்ல் உருவாகியுள்ள வழிமண்டல தாழமுக்க நிலையானது சூறாவழியாக மாற்றமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் இன்று மாலை அல்லது இரவு காலப்பகுதியில் இடியுடன்  கூடிய மழை பெய்ய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல், மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழை பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன்

கொழும்பு, கேகாலை, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருணாகல், கண்டி, மாத்தளை ஆகிய 09  மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள்முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு உடனடியாக தகவல் வழங்குமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்து வரும் மழை காரணமான   நாட்டில் உள்ள நீர்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடைந்து காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயா, ஜின் கங்கை, களு கங்கை, களனி கங்கை ஆகியனவற்றின் நீர் மட்டங்கள் உயர்வடைந்துள்ளதால் அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் வாழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது 

மேலும் குறித்த பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

No comments: