கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தில் விலங்கு சோதனையில் வெற்றி கண்ட சீனா

தடுப்பூசி இல்லாமல்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து ஒன்றினை சீனா உருவாக்கியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த வைரஸ் நோய்க்கு அங்கிகரிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந் நிலையில் சீனாவின்  பீக்கிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டுவரும் மருந்து பாதிக்கப்பட்டவர்களை விரைவி்ல் குணப்படுத்துவதுடன் எதிர்ப்பு சக்தியை விரைவில் வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த  விலங்குகளுக்கு பரிசோதனை செய்து வெற்றியளித்துள்ளதாக அறியமுடிகின்றது.

பாதுகாப்பான தடுப்பூசி ஒன்றினை உருவாக்க 12 முதல் 18 மாதங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: