கொரோனா தொடர்பில் அரசாங்கம் வழங்கும் தகவல்களில் சந்தேகம் எழுகின்றது -இம்ரான்


(ஏ.ஆர்.எம்.றிபாஸ்)

அரசாங்கம்  இன்று நாட்டு மக்களை  ,ஏமாற்றும் ,நிலையில் வைத்திருக்க முயற்சிக்கின்றது,  என திருகோணமலை ,மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான், மகரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவிலுள்ள ,அவரது அலுவலகத்தில் இன்று (17) ,இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் ,தெரிவித்தார்.

கொரோனா தொற்று ,இந்த நாட்டில் மட்டுமல்லாது முழு உலகத்திலும் அதிகரித்துக்கொண்டு வருகின்ற, நிலையில் அரசாங்கம் சரியான தகவல்களை வழங்குகின்றதா என்ற ச,ந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான, நபர்களின் விபரங்களை இரவிலும் குணம் அடைந்தவர்களின் விபரங்களை ,காலையிலும் வெளியிட்டு வருகின்றது எனவும் கொரோனா தொற்று ,இல்லாத நாடாக காட்டி ,தேர்தலை வைக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேர்தல் ,அறிவிக்கப்பட்டால் எவ்வித பதவி, உயர்வுகளும், இடமாற்றங்களும் ,மேற்கொள்ள முடியாது.

ஆனாலும் இந்த, அரசாங்கம் 77 ,இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதுடன் புதிதாக திணைக்களங்களுக்கு, செயலாளர்களையும் நியமித்து வருகின்றது எனவும் தேர்தலுக்கு ,திகதியை நியமித்துள்ளோம் எனவும் இந்த ,அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

ஆகவே இந்த ,நாட்டில் கொரோனா ,நோயை ஒழித்து விட்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்தி விட்டு ,ஜனநாயக முறையில் தேர்தல் நடாத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: