இன்று மத வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி


கல்கிஸ்ஸை தர்மபாலாராம விகாரைக்கு சென்று இலங்கை அமரபுர மகாநிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய கொடுகொட தம்மாவாச நாயக தேரரை ஜனாதிபதி இன்று சந்தித்தார்.

தேரர் அவர்களின் சுகதுக்கங்களை ஜனாதிபதி  கேட்டறிந்ததுடன், கொடுகொட தம்மாவாச மகா நாயக தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர்.

சிலுமின பத்திரிகையின் முன்னாள் பிரதி ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் உபாலி சமரசிங்க எழுதிய 'கொடுகொட தம்மாவாச மகாநாயக்க தேரர்' என்ற நூல் அங்கு ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அமரபுர மகாநிகாய அபிவிருத்தி நிர்வாக சபை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர். ஏ. டீ. சிறிசேன தொகுத்த இலங்கை அமரபுர மகா நிகாய விகாரைகள் தொடர்பான விவரத் திரட்டும் அங்கு  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

No comments: