தொழிலாளர்கள் வீதியிலிறங்கி போராட நேரிடும் -வடிவேல் சுரேஸ்


(நீலமேகம் பிரசாந்த்)

எல்ல ,பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லவத்த தோட்டத்தில், ஒரு சிலரால் நேற்றைய, தினம் காணி அபகரிப்பு நடவடிக்கையில், ஈடுபட்டிருந்த போது குறித்த பகுதியில், பணிபுரிந்து, கொண்டிருந்த, பெண் தொழிலாளர் குறித்த செயற்பாட்டிற்கு எதிராக கேள்வியெழுப்பிய வேளையில் கத்தியால் தாக்கப்பட்டிருந்தார்.

இவ் விடயத்தை ,அறிந்த ,முன்னாள் இராஜாங்க, அமைச்சரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர், சங்கத்தின் ,பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற ,உறுப்பினர் அரவிந்தகுமார் அவர்களும், இன்று,  ஸ்தலத்திற்கு நேரடியாக விரைந்து நேற்றைய ,சம்பவம் தொடர்பில் , கலந்துரையாடினர்.

பெண் தொழிலாளரை, கத்தியால் ,தாக்கிய, குறித்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு எல்ல பொலிஸ் ,பாதுகாப்பு பிரிவினருக்கு வடிவேல் சுரேஷ்  கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொரனா தாக்கத்தை ,காரணமாகக் கொண்டு எமது அப்பாவி சிறுபான்மை மக்களின் காணிகளை ,சட்டவிரோதமாக கைப்பற்றுவதற்கு சமீப காலமாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, வருகின்றது ,குறித்த சில அரசியல் கைககூலிகளினால் இதே போன்ற ,கேவலமிக்க செயற்பாடுகள் அண்மையில் ஹாலி எல, ஹப்புத்தளை,கோணகலை,,, பிளானிவத்தை போன்ற பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள ,காணிகளை ,அத்துமீறி கைப்பற்ற முற்பட்ட வேளையிலும் என்னுடைய, தலையீட்டின் கீழ் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

அவ்வேளையில், பாதுகாப்புப் பிரிவு, தோட்ட ,முகாமைத்துவம் போன்றவற்றிற்கு ,அறிவித்த, போதும் ,இதுவரையில் ,எதுவித நடவடிக்கைகளும் ,முன்னெடுக்கப்படவில்லை என்றும்-

-பொறுப்புவாய்ந்த, அதிகாரிகளே இவ்வாறு கைகட்டி வேடிக்கை ,பார்ப்பதை நோக்கும் போது இச், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பின்புலம், இவர்களோ?? எனும் சந்தேகம் எழுகின்றது, மக்கள் மத்தியில்.. இவ்வாறு தோட்ட முகாமைத்துவத்தினரும்பாதுகாப்பு, துறையினரும், மௌனம் காத்து அசமந்த போக்குடன் செயற்படுவார்களாயின், சம்பந்தப்பட்ட ,குற்றவாளிகள் மீது நாமே நடவடிக்கை முன்னெடுக்க வேண்டிய ,நிலை ஏற்படும் ,அதுமட்டுமன்றி அனைத்து பெருந்தோட்டப் ,பகுதிகளிலும் ,போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துக் கொள்கின்றேன்.

எது எவ்வாறாயினும் ,தோட்டத்தில் பணிபுரிந்து, கொண்டிருந்த பெண் தொழிலாளர் மீது, கத்திக் குத்து தாக்குதல் ,நடத்தியமை ,சட்டவிரோதமான மனித உரிமை மீறல் ,செயற்பாடாகும்.தொழில், புரியும் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்து ஒரு பெண், என்றும், பாராமல், அவர் ,மீது தாக்குதல் நடத்தியமை கேவலமிக்க, தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, இவ்விடத்திற்கு, எதிராக குறிப்பிட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு,  தண்டனை வழங்க வேண்டும் இவ்விடயத்தில் காலதாமதம் ஏதேனும் ஏற்படும் ,பட்சத்தில், ஒட்டுமொத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களும் வீதிக்கு இறங்கி ,போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.ஆகவே துரித கதியில் ,விரைந்து செயற்படுமாரு பாதுகாப்பு பிரிவினரையும் தோட்ட, முகாமைத்துவத்தினரையும் ,உத்தரவு விடுக்கின்றேன். என தெரிவித்தார்.

No comments: