தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


கொரோனா, வைரஸ் காரணமாக செயலிழந்துள்ள தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு ,மாதாந்த சம்பளத்தின் அரைவாசி அல்லது  ரூபா 14,500 ஆகிய இரண்டில் எது ,கூடுதலானதோ ,அத்தொகையை சம்பளமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ,அலுவல்கள் ,மற்றும் ,மனிதவள அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், முன்வைக்கப்பட்ட ,யோசனைக்கு அமைச்சரவை ,அனுமதி, வழங்கியுள்ளதாக,, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல ,குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (14) இடம்பெற்ற ,அமைச்சரவை, முடிவுகளை, அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் ,தெரிவித்தார்.

அமைச்சர் ,தினேஷ் ,குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ,இணைந்து, இலங்கையிலுள்ள முதலாளிமார் சம்மேளனம் உள்ளிட்டவர்களுடன் இது தொடர்பிலான ,பல்வேறு ,விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களை ,மேற்கொண்டு, இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ,தமது, தொழில்துறையை ,மூடாது, மீளக் கட்டியமைத்து, புத்துயிர் பெறப்படும் வரை, மாதாந்த சம்பளத்தின் அரைவாசி ,அல்லது குறைந்தபட்சம் ரூபா 14,500 ஆகிய இரண்டில் எது கூடுதலானதோ ,அத்தொகையை சம்பளமாக வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

No comments: