எல்லவத்த தோட்டத்தில் காணி அபகரிப்பு சர்ச்சையில் கை வெட்டுப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதி

நீலமேகம் பிரசாந்த்

மலையகம்  எல்ல பிரதேச சபைக்குட்பட்ட எல்லவத்த தோட்டத்தில்  தொடர்தேர்ச்சியாக காணி அபகரிப்பு ,இடம் பெற்று வருவதாக எமது மலையக செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில்,இன்று (14 ) எல்லவத்த பிரதேசத்தில் உள்ள  காணியொன்றை முற்றுகையிட முயற்சிக்கும்,போது குறித்த இடத்தில் வேலைசெய்த பெண் தோட்டத்தொழிலாளி காணியை முற்றுகையிட எத்தணித்த நபரை எதிர்த்து கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது கத்தியால்,தோட்டதொழிலாளியான குறித்தபெண்ணின் கை வெட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் தொழிலாளி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


No comments: