அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவிப்பு !


சாதாரண ஆடைகளை அணிந்து கடமைக்கு வரவேண்டும் என  சுதேச விவகார உள்ளுராட்சி மன்ற  மாகாணசபைகள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போது  கீழ் காணும் விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நாம் அணியும் ஆடைகள்  ஆபரணங்கள் ஊடாக  பரவக்கூடிய சந்தர்ப்பங்கள்  இருக்கின்றபடியால் மேற் குறித்த  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக

ஒசரி சாரி, சாரி, மாலைகள், மோதிரங்கள் உள்ளிட்ட ஆடைகள் ஆபரணங்கள் என்பனவற்றை அணிந்து வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் தாய்ப்பாலூட்டும் பெண்கள் தொடர்பில் மிகவும் இலகுவான நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் மே மாத இறுதி வரையில் அவர்களை பணிக்கு அழைக்காதிருக்க முடிந்தளவு முயற்சிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண் உத்தியோகத்தர்கள் எழுத்து மூலம் தமது நிலைமைகளை முன்வைக்க வேண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிக்கப்படும் போது உத்தியோகத்தர்கள் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.





No comments: